July 28, 2010

ஆரம்ப முதலே கல்விச்சாலைகளோடு பெற்றாரின் பங்களிப்பை அதிகரிக்கும் செயல்பாடுகளுக்கு ஊக்கமளித்தால் கல்வி அபிவிருத்தியில் பெற்றாரின் ஈடுபாடு அதிகரிக்கும்.

ஆமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கையில் பெருந்தோட்ட கல்வி தொடர்பாக நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிடுவதற்காக “பெருந்தோட்ட கல்வியில் பெற்றாரின் பங்களிப்பு” என்னும் தலைப்பில் அண்மையில் அட்டனில் நடாத்திய கருத்தரங்கில் பெருந்தோட்ட கல்வியில் பெற்றாரின் பங்களிப்பு மிகவும் குறைந்தளவிலேயே உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. உண்மையில் இந்த நிலைமையே அனேகமாக பெருந்தோட்ட பாடசாலைகளில் காணப்படுகிறது. இதற்கு காரணம் பிள்ளையின் கல்வி ஆரம்பிக்கும் காலத்திலிருந்தே பிள்ளையின் கல்விதொடர்பான ஆர்வத்தை பெற்றார் மத்தியில் ஏற்படுத்தக்கூடிய ஒரு சூழலை நாம் ஏற்படுத்திக் கொடுக்காததே ஆகும். ஆனால் பெருந்தோட்ட பகுதிகளில் பிரிடோ நிறுவனத்தின் முன்பள்ளிகள் இயங்கும் பகுதிகளில் இந்த விடயத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முன்பள்ளி அபிவிருத்சபைகள் ஆரம்பிக்கப்பட்டு பெற்றாரே முன்பள்ளிகளை நிர்வகிக்கிறார்கள் . முன்பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட கற்றல் செயல்பாடுகள் குறித்து அக்கறை காட்டுகிறார்கள்;. முன்பள்ளி ஆசிரியைகளோடு தொடர்ந்து இணைந்து செயல்பட்டு தங்கள் பிள்ளைகளின் கல்வி வளாச்சி குறித்து அக்கறை காட்டிவருகிறார்கள்.
தங்களுடைய பிள்ளைகள் மட்டுமின்றி எல்லா பிள்ளைகளின் கல்வித் தரமும் அதிகரிக்க வேண்டும் என நல்லெண்ணத்தோடு செயல்படுகிறார்கள். தற்போது வெறுமனே முன்பள்ளிக் கல்வியில் மட்டுமன்றி தங்கள் பிள்ளளைகள் மேலதிக திறன் விருத்திகளை பெறவேண்டும் என்ற ஆர்வத்தோடும் செயல் படுகிறார்கள். உதாரணமாக பொகவந்தலாவை பிரட்வெல் முன்பள்ளிப் பெற்றார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கணனிப் பயற்சியும்ää நவீன கற்றல் உபகரணங்களையும் பயன்படுத்தி கற்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக பிள்ளைகளை பொகவந்தலாவையில் உள்ள நவீன முன்பள்ளிக்கு அழைத்து சென்று அந்த பயிற்சிகளை வழங்குவதற்காக மாதாந்த பெற்றார் கட்டணத்தை விட மேலதிகமான ஒரு தொகையை வழங்கி வருவது மட்டுமின்றி சில வேளைகளில் தங்கள் பிள்ளைகளை அவ்வாறான இடத்துக்கு அழைத்து செல்வதற்காக ஒரு நாள் வேலையை கூட தியாகம் செய்ய தயாராக இருக்கிறார்கள். செபல்டன் டீபீää என்சீää கொடியாகலை மத்தியபிரிவு பெற்றார்களும் இதுபோன்ற செயல்பாடுகளுக்கு உதவியிருக்கிறார்கள். இவ்வாறான செய்லபாடானது பெற்றாருக்கு கல்விச்சாலைக்கும் ஆரம்பமுதலே நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி கல்விச் செயல்பாடுகிளில் அவர்களின் பங்களிப்பை பெற்று அதனை மதித்துக் ஊக்குவித்தால் பாடசாலைகளோடு பெற்றாரின் தொடர்பை இலகுவாக அதிகரிக்காலாம் என்ற விடயத்தை நிருபிக்;கிறது. கல்விச்சாலைகளோடு பெற்றாரின் பங்களிப்வு எவ்வளவுக்கு அதிகரிக்கிறதோ அந்தளவுக்கு கல்விச்சாலைகளின் தரமும் பிள்ளைகளின் கல்வித் தரமும் உயரும் என்பதே உண்மையாகும்.

“கல்விச்சாலைகளோடு பெற்றாரின் பங்களிப்பை அதிகரிப்பது மலையக கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு அத்தியாவசியமான செயல்பாடாகும்” என்ற தலைப்பில் போகவந்தலாவை நவீன முன்பள்ளி நிலையத்தில் பிரிடோ முன்பள்ளி ஆசிரியைகளுக்காக நடைபெற்ற அமர்வில் கருத்து தெரிவித்து பிரிடோ பிரிட்வெல் முன்பள்ளி சிறுவர் உரிமை சமாதான மேம்பாட்டாளர் திருமதி கிருஸ்ணகுமார் சுபமலர் இவ்வாறு தெரிவத்தார்.


MyFreeCopyright.com Registered & Protected

No comments:

Post a Comment