July 28, 2010

பெருந்தோட்டங்களில் முன்பள்ளிகளை நடத்துவதற்கு தோட்ட நிர்வாகங்கள் இடையூறு செய்யவதை அனுமதிக்க வேண்டாம்.

கடந்த பல வருடங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தத்திற்கு பின்னர் எல்லா பிள்ளைகளுக்கும் முன்ளிக்கல்வி அவசியம் என்பதை எல்லா பெற்றார்களும் உணர்ந்துள்ளார்கள். ஆனால் அண்மைக்காலம் வரை பெருந்தோட்ட பகுதி பெற்றார்கள் முன்பள்ளிக்கல்வியின் முன்கியத்துவத்தை அறிந்திருக்கவில்லை. எனினும் முன்பள்ளிக் கல்வி தொடர்பாக பரந்தளவிலான அறிய10ட்டல் காரணமாக முன்பள்ளிக் கல்வியின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர்ந்து வருகின்றனர். ஆனால் துரதிஸ்ட வசமாக அரச சார்பற்ற நிர்வனங்கள் இயங்கும் தோட்டங்கள் தவிர்ந்த பெரும்பாலான தோட்டங்களில் முன்பள்ளிகள் இல்லாததால் பிள்ளைகளுக்கு முன்பள்ளிக்கல்வி பெறும் உரிமை கிடைக்கவில்லை. தோட்டங்கள் தோறும் முன்பள்ளிகள் உருவாக வேண்டும் அவற்றில் கற்பிக்க பயிற்றப்பட்ட ஆசிரியைகள் இருப்பதோடு முன்பள்ளிகளில் கற்றல் நடைவடிக்கைகளை கண்காணிக்க ஏதாவது ஒரு அமைப்பின் உதவி தேவை.
கால மாற்றத்திற்கு ஏற்ற முறையில் தங்களை மாற்றிக் கொண்டுள்ள தோட்ட நிர்வாகங்கள் முன்பள்ளிகளுக்கு தம்மாலான உதவிகளை செய்து வருகின்றன. ஆனால் இன்னும் சில தோட்டங்கள் முன்பள்ளிகளுக்கு பல விதமான இடைய10றுகளை செய்து வருகின்றன. உதாரணமாக சிறுவர் நிலையத்தில் முன்பள்ளி நடத்துவதால் சிறுவர்களை அங்கு அனுப்புமாறு கட்டாயப்படுத்தல்ää வேறு முன்பள்ளிகளுக்கு செல்லும் சிறுவர்களுக்கு போசாக்கு உணவு கொடுக்க மறுத்தல்ää அவர்களை முன்பள்;ளி நேரத்துக்கு பின்னர் பகல் நேரத்தில் சிறுவர் நிலையங்களில் அனுமதிக்க மறுத்தல் போன்ற பல்வேறு வகைகளில் இடைய10றுசெய்கிறாhகள். பெருந்தோட்ட மக்களை தோட்ட நிர்வாகங்கள் தமக்கு வேண்டிய முறையில் நடத்த நாம் அனுமதிக்க கூடாது. முன்பள்ளி கல்வி பெறும் உரிமை பெருந்தோட்ட சிறுவருக்கும் உண்டு. இந்த உரிமைக்காக நாம் தோட்ட நிர்வாகத்திடம் கையேந்த வேண்டியதில்லை.
இதைவிட பெருந்தோட்டதுறை தொடர்பான அரசினால் அங்கீகரிக்கப்பட்ட முக்கிய அபிவிருத்தி ஆவணமாக கருதப்படுகின்ற “பெருந்தோட்ட சமூகத்தின் சமூக அபிவிருத்திக்கான பத்தாண்டு தேசிய திட்ட” அறிக்கையில்ää கல்வி அபிவிருத்தி எனும் பிரிவின் கீழ் “ஆரம்ப பிள்ளைபராய கவனிப்பும் கல்வியும்” எனும் உபதலைப்பின் கீழ் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
“பெருந்தோட்ட பெற்றோர் மத்தியில் சிறுவர்களுக்கு முன்பள்ளிக்கல்வி வழங்கவேண்டியதன் அவசியம் குறித்தும் பிள்ளைகளை முன்பள்ளி கல்விசாலைகளுக்கு அனுப்பவேண்டிய அவசியம் குறித்தும் விழிப்புணர்வூட்ட வேண்டும். முன்பள்ளிகளை முகாமைத்துவம் செய்வதில் பெற்றோரின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமானதாகும். பெருந்தோட்ட இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவர்கள் முன்வந்து தாமாகவே முன்பள்ளிகளை ஆரம்பிப்பதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும்.”அரசாங்கமே இவ்வாறு முன்பள்ளிக்கல்வியை வலியுறுத்தும் போது தோட்ட நிர்வாகங்கள் எப்படி முன்பள்ளிகளுக்கு இடைய10று செய்ய அனுமதிக்க முடியும்.

மேலும் பெருந்தோட்ட பகுதிகளில் அதிக எண்ணிக்கையான முன்பள்ளிகளை நடத்திவரும் பிரடோ நிர்வனம் 2005 ஆண்டில் முனபள்ளிகள் தொடர்ப்hக டிரஸ்ட நிர்வனத்துடன் நடத்திய பேச்சு வார்தையின் பின்னர் அப்போதைய டிரஸ்ட் நிர்வன நுவரெலியா பிராந்திய இயக்குனர் 2005.ஏப்ரல் 8ம் திகதி கடிதத்தின் மூலமாக தோட்ட நிர்வாகங்கள் முன்பள்ளிகளுக்கு எல்லா ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் எனவும் முன்பள்ளிகளுக்கு செல்லும் சிறுவர்கள் மாலை நேரத்தில் சிறுவர் நிலையங்களில் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் உறுதியளத்துள்ளார். இந்;த பின்னியில் முன்பள்ளிகளக்குசெல்லும் சிறுவர்களை பகல் நேரத்தில் சிறுவர்நிலையத்தில் சேர்த்துக்கொள்ள முடியாது என சிறுவர் நிலைய தாதிகள் சொல்ல முடியாது. எனவே முன்பள்ளிகளுக்கு எதிர்பபு தெரிவிக்கும் தோட்ட நிர்வாங்களுக்கு மக்கள் தமக்குள்ள உரிமைகளை எடுத்து சொல்லி தங்கள் உரிமையை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்.

MyFreeCopyright.com Registered & Protected

ஆரம்ப முதலே கல்விச்சாலைகளோடு பெற்றாரின் பங்களிப்பை அதிகரிக்கும் செயல்பாடுகளுக்கு ஊக்கமளித்தால் கல்வி அபிவிருத்தியில் பெற்றாரின் ஈடுபாடு அதிகரிக்கும்.

ஆமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கையில் பெருந்தோட்ட கல்வி தொடர்பாக நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிடுவதற்காக “பெருந்தோட்ட கல்வியில் பெற்றாரின் பங்களிப்பு” என்னும் தலைப்பில் அண்மையில் அட்டனில் நடாத்திய கருத்தரங்கில் பெருந்தோட்ட கல்வியில் பெற்றாரின் பங்களிப்பு மிகவும் குறைந்தளவிலேயே உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. உண்மையில் இந்த நிலைமையே அனேகமாக பெருந்தோட்ட பாடசாலைகளில் காணப்படுகிறது. இதற்கு காரணம் பிள்ளையின் கல்வி ஆரம்பிக்கும் காலத்திலிருந்தே பிள்ளையின் கல்விதொடர்பான ஆர்வத்தை பெற்றார் மத்தியில் ஏற்படுத்தக்கூடிய ஒரு சூழலை நாம் ஏற்படுத்திக் கொடுக்காததே ஆகும். ஆனால் பெருந்தோட்ட பகுதிகளில் பிரிடோ நிறுவனத்தின் முன்பள்ளிகள் இயங்கும் பகுதிகளில் இந்த விடயத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முன்பள்ளி அபிவிருத்சபைகள் ஆரம்பிக்கப்பட்டு பெற்றாரே முன்பள்ளிகளை நிர்வகிக்கிறார்கள் . முன்பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட கற்றல் செயல்பாடுகள் குறித்து அக்கறை காட்டுகிறார்கள்;. முன்பள்ளி ஆசிரியைகளோடு தொடர்ந்து இணைந்து செயல்பட்டு தங்கள் பிள்ளைகளின் கல்வி வளாச்சி குறித்து அக்கறை காட்டிவருகிறார்கள்.
தங்களுடைய பிள்ளைகள் மட்டுமின்றி எல்லா பிள்ளைகளின் கல்வித் தரமும் அதிகரிக்க வேண்டும் என நல்லெண்ணத்தோடு செயல்படுகிறார்கள். தற்போது வெறுமனே முன்பள்ளிக் கல்வியில் மட்டுமன்றி தங்கள் பிள்ளளைகள் மேலதிக திறன் விருத்திகளை பெறவேண்டும் என்ற ஆர்வத்தோடும் செயல் படுகிறார்கள். உதாரணமாக பொகவந்தலாவை பிரட்வெல் முன்பள்ளிப் பெற்றார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கணனிப் பயற்சியும்ää நவீன கற்றல் உபகரணங்களையும் பயன்படுத்தி கற்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக பிள்ளைகளை பொகவந்தலாவையில் உள்ள நவீன முன்பள்ளிக்கு அழைத்து சென்று அந்த பயிற்சிகளை வழங்குவதற்காக மாதாந்த பெற்றார் கட்டணத்தை விட மேலதிகமான ஒரு தொகையை வழங்கி வருவது மட்டுமின்றி சில வேளைகளில் தங்கள் பிள்ளைகளை அவ்வாறான இடத்துக்கு அழைத்து செல்வதற்காக ஒரு நாள் வேலையை கூட தியாகம் செய்ய தயாராக இருக்கிறார்கள். செபல்டன் டீபீää என்சீää கொடியாகலை மத்தியபிரிவு பெற்றார்களும் இதுபோன்ற செயல்பாடுகளுக்கு உதவியிருக்கிறார்கள். இவ்வாறான செய்லபாடானது பெற்றாருக்கு கல்விச்சாலைக்கும் ஆரம்பமுதலே நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி கல்விச் செயல்பாடுகிளில் அவர்களின் பங்களிப்பை பெற்று அதனை மதித்துக் ஊக்குவித்தால் பாடசாலைகளோடு பெற்றாரின் தொடர்பை இலகுவாக அதிகரிக்காலாம் என்ற விடயத்தை நிருபிக்;கிறது. கல்விச்சாலைகளோடு பெற்றாரின் பங்களிப்வு எவ்வளவுக்கு அதிகரிக்கிறதோ அந்தளவுக்கு கல்விச்சாலைகளின் தரமும் பிள்ளைகளின் கல்வித் தரமும் உயரும் என்பதே உண்மையாகும்.

“கல்விச்சாலைகளோடு பெற்றாரின் பங்களிப்பை அதிகரிப்பது மலையக கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு அத்தியாவசியமான செயல்பாடாகும்” என்ற தலைப்பில் போகவந்தலாவை நவீன முன்பள்ளி நிலையத்தில் பிரிடோ முன்பள்ளி ஆசிரியைகளுக்காக நடைபெற்ற அமர்வில் கருத்து தெரிவித்து பிரிடோ பிரிட்வெல் முன்பள்ளி சிறுவர் உரிமை சமாதான மேம்பாட்டாளர் திருமதி கிருஸ்ணகுமார் சுபமலர் இவ்வாறு தெரிவத்தார்.


MyFreeCopyright.com Registered & Protected

July 9, 2010

சிறுவர்கள் உயிர்வாழும் உரிமையை மதிக்கத்தவறிய செயலை பிரிடோ நுவரெலியா மாவட்ட சிறுவர் ஒன்றியம் கடுமையாக கண்டிக்கின்றது.

புஸ்ஸல்லாவை பகுதியில் புரொட்டொப் தோட்டத்தில் கர்ப்பிணித்தாய் ஒருவர் லொறியில் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்படும் போது குழந்தையை பிரசவித்ததால் சிசு மரணமான சம்பவம் தொடர்பாக பலரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றார்கள். நோயாளிகளை அதிலும் கர்ப்பிணித்தாய் ஒருவரை சாதாரண மனிதர்களே போக்குவரத்து செய்வதற்கு பயன்படுத்த கூடாத லொறியில் வைத்தியசாலைக்கு எடுத்துசென்றதன் மூலம் எமது தாய்மார்களுக்கான பெண்கள் உரிமைகள் மீறப்பட்டுள்ளன. தாய்மார்கள் இழிவுபடுத்தப்பட்டுள்ளார்கள். இதைவிட சிறுவர்கள் என்ற முறையில் நாம் முக்கியமாக சுட்டிக்காட்டும் விடயம் என்னவென்றால் சிறுவர் உரிமை சமவாயத்தின் 6வது உறுப்புரிமையின்படி “சிறுவர்களுக்கு உயிர்வாழும் உரிமை உண்டு” இந்த உரிமையை சிறுவர்களால் பாதுகாத்துக்கொள்ள முடியாததால் அந்த உரிமையை பாதுகாப்பது வளர்ந்தோர் ஒவ்வொருவரினதும் கடமையும் பொறுப்புமாகும். இந்த கடமையையும் பொறுப்பையும் மீறுவது சிறுவரின் உரிமையை அப்பட்டமாக மீறும் செயலாகும். அதுமாத்திரமல்லாமல் இந்த கடமையையும் பொறுப்பையும் நிறைவேற்றுவதில் இருந்து பொறுப்புவாய்ந்தவர்கள் தவறும்போது அது மறைமுகமாக சிறுவரின் உயிர்வாழும் உரிமையை மீறி அவர்கள் உயிரிழப்பதற்கு காரணமாகின்றது. எனவே இது ஒருவகையில் மறைமுகமான சிசுக்கொலை என்றே நாங்கள் கருதுகின்றோம்.

எமது அரசாங்கம் சிறுவரின் உயிர்வாழும் உரிமையை பாதுகாப்பதற்கும் அவர்களின் மற்ற உரிமைகளை பாதுகாப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அரசாங்கம் இவ்வாறு செயற்படும்போது பொறுப்புவாய்ந்தவர்கள் தமது கடமைகளில் இருந்து தவறுவதை நாம் அனுமதிக்க கூடாது. சிறுவர்களின் உரிமைகளுக்காக வளர்ந்தவர்கள் குரல்கொடுக்காத போது அதற்காக குரல்கொடுக்கும் உரிமையும் பொறுப்பும் சிறுவர்களாகிய எமக்கு உள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் ஊடகங்களில் வெளிவரும் போது சிறுவர் உரிமைகளை பாதுகாக்க பல முயற்சிகளை மேற்கொள்ளும் எமது நாட்டின் நற்பெயருக்கு அது களங்கத்தை ஏற்படுத்துகின்றது. ஆகவே இவ்வாறான அல்லது வேறுவகையான சிறுவர் உரிமை மீறல்களில் ஈடுபடும் நபர்கள் அல்லது அமைப்புக்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

இந்த பின்னணியில் சிறுவரின் உரிமைகளை மதிக்காத இச்செயற்பாடு குறித்து பிரிடோ சிறுவர் ஒன்றியம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றது. எதிர்காலத்தில் நோயாளிகளை அதிலும் விசேடமாக கர்ப்பிணித்தாய்மார்களை போக்குவரத்து செய்வதற்கு அம்புலன்ஸ் வண்டிகள் அல்லது பொருத்தமான வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் எந்த காரணம் கொண்டும் லொறிகளை பயன்படுத்த கூடாது எனவும் எமது ஒன்றியம் வலியுறுத்த விரும்புகின்றது. இந்த விடயத்தை எங்கள் மலையக அரசியல் தொழிற்சங்க தலைவர்கள் ஒரு பாரதூரமான சிறுவர் உரிமை மீறல் விவகாரமாக கருதி நடவடிக்கை எடுத்தல் வேண்டும். அத்தோடு மலையகத்தின் அரசசார்பற்ற அமைப்புக்கள் உட்பட மற்றைய பொது அமைப்புக்கள் இது விடயத்தில் குரல் எழுப்பி தமது கண்டனத்தை தெரிவிப்பதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறாதிருப்பதை உறுதிசெய்ய வேண்டும். இந்த விடயத்தை பெண்கள் சிறுவர் வலுவூட்டல் அமைச்சின் கௌரவ அமைச்சர் அவர்களினது கவனத்திற்கு கொண்டுவர நாம் முடிவு செய்துள்ளோம்.

புரொட்டொப்ட் தோட்டத்தில் நடைபெற்ற சிசு மரணம் தொடர்பாக பிரிடோ நிறுவன நுவரெலியா மாவட்ட சிறுவர் ஒன்றிய தலைவர் செல்வன். கணேசன் சரத்பாபுää பொகவந்தலாவை பிராந்திய சிறுவர் ஒன்றிய தலைவி செல்வி. விக்டோரியா ஆகியோர் கூட்டாக பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

MyFreeCopyright.com Registered & Protected

பெண்கள் உரிமைகளையும் சிறுவர் உரிமைகளையும் மீறும் செயலாக புரட்டொப் தோட்ட சம்பவம் அணுகப்படவேண்டும்.

கடந்த வார வீரகேசரி குறிஞ்சிப்பரல்கள் பகுதியில் புஸ்ஸல்லாவ பகுதியிலுள்ள புரட்டொப் தோட்டத்தில் கர்ப்பிணித் தாய் ஒருவர் லொறியில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுகையில் லொறியிலேயே குழந்தை பிரசவிக்கப்பட்டு சிசு மரணமான விவகாரம் தொடர்பான இரு கட்டுரைகள் வெளிவந்திருந்தன. முறையான வைத்திய சேவை இல்லாமைää சீரான போக்குவரத்து வசதி இல்லாமை ஆகிய இரு விடயங்கள் குறித்து அவற்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

வைத்திய தேவைக்காக லொறிகளை பயன்படுத்தும் பழக்கம் இன்னும் நடைமுறையில் உள்ளது.

இது விடயத்தில் நாம் முதலாவது கவனத்தில் எடுக்க வேண்டிய விடயம் என்னவென்றால் லொறியில் எடுத்துச் செல்லப்பட்ட தாய்க்கு லொறியில் பிரசவமேற்பட்டு சிசு மரணமான சம்பவம் நிகழ்ந்திருக்காவிட்டால் இந்த நவீனகாலத்தில் கூட பெருந்தோட்ட பெண்கள் அதுவும் கர்ப்பிணிப்பெண்கள் ஆடுமாடுகளை போல லொறிகளில் எடுத்து செல்லும் சம்பவங்கள் நடக்கின்றன என்ற விடயம் வெளியில் தெரியாமலே தொடர்ந்து நடந்திருக்கும். ஆசிய பிராந்தியத்தில் சுகாதாரத்துறையை பொறுத்த மட்டில் மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பதாக பெயர் எடுத்திருக்கும் எமது நாட்டில் பெருந்தோட்ட சுகாதாரத்;துறை இவ்வாறான நிலையில் இருப்பதையும் பெண் நோயாளிகள் அதுவும் கர்ப்பிணிப்பெண்கள் லொறிகளில் எடுத்து செல்லப்படும் அவலம் வெளியில் தெரியாமலே நடந்து கொண்டிருக்கும் போது நாம் இது தொடர்பாக எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் இருக்கிறோம் என்பது முழு மலையகமும் மலையக தலைவர்களும் வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயமாகும்.
மலையக சுசாதாரத்துறை இன்னும் முழுமையாக தேசிய சுகாதாரத்துறைக்கு உள்ளெக்கப்படாமல் இருப்பதன் ஒரு விளைவே இது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

பெண்கள் உரிமைகளை மீறும்செயல்

ஆயினும் இன்றைய நிலையில் இது விடயத்தை நாம் வேறு கோணத்தில் இருந்து பார்த்தல் வேண்டும். நமது அரசு பெண்களினதும் சிறுவர்களினதும் உரிமைகளை பாதுகாக்கவென பெண்கள் சிறுவர் வலுப்படுத்தல் அமைச்சு என்னும் பெயரில் தனியான அமைச்சு ஒன்றையே உருவாக்கியிருக்கிறது. எமது நாட்டில் பெண்கள் பட்டயம் ஒன்று உள்ளது. இதைவிட சீடோ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பெண்களுக்கெதிரான அனைத்து பாரபட்சங்களையும் நீக்குவது தொடர்பான அனைத்துலக பொருந்தணை (Convention on elimination of all forms of discrimination against women) எனப்படும் சர்வதேச உடன்படிக்கை ஒன்றையும் நமது அரசு கையொப்பமிட்டுள்ளது. இந்த சீடோ பொருந்தணையின் பதின்நான்காவது சரத்து கிராமிய பெண்கள் (பெருந்தோட்ட பெண்களையும் உள்ளடக்குகிறது) சமமாக நடத்தப்படவும் சுகாதாரம்ää சுகநல சேவைகளை அனுபவிக்கவும் உரிமை உடையவர்களாவர் என்பதை தெட்டத்தெளிவாக உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்த பின்னணியில் பெருந்தோட்ட பெண்களின் வைத்திய தேவைகளுக்காக லொறிகளை பயன்படுத்துவது அவர்களின் உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயலும் பெண்களின் மாண்பினை துச்சமாக மதிக்கும் செயலுமாகும். இந்த அடிப்படையில் வைத்திய தேவைகளுக்காக லொறிகளை பயன்படுத்தும் அநாகரீகமானதும் காட்டுமிராண்டித் தனமானதுமான செயல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இத்தேவைகளுக்காக அம்புலன்சுகள் மட்டுமே எதிர்காலத்தில் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய மலையக அரசியல் தலைவர்கள் தொழிற்சங்கவாதிகள் உடனடி நடவடிக்கை எடுப்பதுடன் இவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் பொறுப்பை மலையக சிவில் சமூக இயக்கங்களும் அரசு சார்பற்ற நிறுவனங்களும் ஏற்க வேண்டும்.

சிறுவர் உரிமைகளும் மீறப்பட்டுள்ளன.

அடுத்தாக இது விடயத்தில் நாம் கவனத்திலெடுக்க வேண்டிய இன்னொரு விடயம் உண்டு. அரசு அனைத்துல சிறுவர் சமவாயத்தில கையொப்பமிட்டிருப்பதுடன் சிறுவர் உரிமைகளை பாதுகாக்க பல அமைப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி சம்பவத்தில் போதிய சுகாதார வசதி கிடைக்காததால் சிசு மரணமடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சி காரணமாக சிறுவரின் மிக முக்கிய உரிமைகள் இரண்டு மீறப்பட்டுள்ளன. சிறுவர் சமவாயத்தில் 6ம் உரிப்புரிமை “பிள்ளைகள் உயிர் வாழும் உரிமையுடையவர்கள் என்பதை ஒவ்வொருவரும் அங்கீகரித்தல் வேண்டும். பிள்ளைகளின் உய்வையும் வளர்ச்சியையும் அரசாங்கம் உறுதி செய்தல் வேண்டும்” எனக் கூறுவதுடன்; சமவாயத்தில் 24ம் சரத்து “பிள்ளைகள் கூடுமானளவு உயரிய சுகாதார வசதிகளைப் பெறும் உரிமையுடையவர்களாவர். சுகாதார மற்றும் வைத்திய சேவைகளைப் பெறும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தல் வேண்டும். விசேடமாக சிசு மரணம் நோய் போசாக்கின்மை ஆகியவற்றைக் குறைக்கும் வகையிலான ஆரம்ப மற்றும் தடுப்பு ரீதியான சுகாதார பராமரிப்பு. பொதுச் சுகாதாரக்கல்விää அவை தொடர்ப்பான செயற்திட்டங்கள் ஆகியவற்றை பெறும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தல் வேண்டும்” எனவும் கூறுகிறது. இந்த சம்பவத்தில் இந்த முக்கியமான இரண்டு சிறுவர் உரிமைகளும் மீறப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம். ஆகவே இது சிறுவர்களின் உரிமைகளை துச்சமாக மதித்து அவர்கள் உரிமைகளை மீறும் ஒரு பாரதூரமான சம்பவமாகும். மொத்தத்தில் இந்த சம்பவம் பெண்கள் உரிமைகளையும் சிறுவர் உரிமைகளையும் மீறும் சம்பவங்கள் என்பதை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளுதல் வேண்டும்.

உரிமைகளை மீறுபவர்கள் அவற்றை வழங்கவேண்டிய நிலையை உருவாக்க வேண்டும்.

உரிமையை மீறியவர்கள் இந்த தோட்டத்தை நிர்வகிக்கும் கம்பனியும் தோட்ட நிர்வாகமும் ஆகும். எனவே தோட்ட வைத்தியரை இடமாற்றுவதால் இந்த பிரச்சினைக்கு எதுவித தீர்வும் கிடைக்காது. மக்கள் இதனை ஒரு உரிமை மீறல் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு அதற்காக தீர்வை அடைய முயலவேண்டும். இது புரட்டொப் தோட்டமக்களின் பிரச்சினை மட்டுமல்ல எங்கெங்கெல்லாம் வைத்திய தேவைகளுக்காக லொறிகள் பயன்படுத்தப்படுகின்றனவோ எங்கெல்லாம் மக்களுக்கு உரிய சுகாதார வசதிகள் கிடைக்கவில்லையோ அத்தனை மக்களினதும் பிரச்சினையாகும். வைத்திய தேவைகளுக்காக லொறிகள் பயன்படுத்தும் அநாகரீகமான உரிமைமீறல் சம்பவங்களுக்கு எதிர்காலத்தில் முற்றிப்புள்ளி வைக்கப்பட வேண்டும். வைத்திய தேவைகளுக்காக இனி லொறிகளை பயன்படுத்துவதில்லை என்பதை ஒரு கொள்கையாக பிரகடனப்படுத்துமாறு தோட்ட கம்பனிகள் கோரப்பட வேண்டும். ஒவ்வொரு தோட்டத்திற்கும் ஒரு அம்புலன்ஸ் வண்டி இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

அத்தோடு தோட்ட சுகாதாரத்துறை தேசிய சுகாதாரத்துறையில் முற்றாக உள்ளெடுக்கப்படாமல் இருப்பதே இந்த பிரச்சினைக்கெல்லாம் மூலகாரணம் என்பதை நமது அரசியல்வாதிகளும் தலைவர்களும் உணர்ந்து தோட்ட சுகாதாரத்துறையை முழுமையாக தேசிய சுகதாரத்துறையில் இணைக்கும் நடிவடிக்கை எடுக்க வேண்டும்.

இறுதியாக இவ்வாறான விடயங்களை வெறும் சம்பவங்களாக எடுத்துக்கொண்டு குரல் எழுப்புவதை விடுத்து நமக்கு சட்டரீதியாகவோ அல்லது சர்வதேச பொருந்தணைகள் ரீதியாகவோ வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மீறப்படும் போது அவற்றை நாம் உரிமை மீறல் சம்பவங்களாக எடுத்துக்கொண்டு அந்த அடிப்படையில் கோரிக்கைகளை வலியுறுத்தி அவற்றை வென்றெடுக்க மக்களுக்கு அறிவ10ட்டுவதே இன்றைய தேவையாகும்.

MyFreeCopyright.com Registered & Protected

புரட்டொப்ட் சிசு மரண சம்பவம் பெண்கள் உரிமைகளையும் சிறுவர் உரிமைகளை மீறும் செயலாகும்.

புஸ்ஸெல்லாவ பகுதியிலுள்ள புரட்டொப் தோட்டத்தில் கர்பிணித் தாய் ஒருவர் லொறியில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுகையில் லொறியிலேயே குழந்தை பிரசவிக்கப்பட்டு சிசு மரணமான விவகாரம் தொடர்பாக செய்தி பத்திரிக்கைளில் வெளிவந்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் பெண்களை கருத்தடை சிகிட்சை செய்வதற்காக லொறிகளில் ஏற்றி சென்ற விடயத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் வைத்திய தேவைகளுக்காக லொறிகளை பயன்படுத்தும் வழக்கம் கைவிடப்பட்டாக கருதப்பட்டது. ஆனால் புரட்டொப்ட் தோட்ட சம்பவம் இன்னும் தோட்டங்களில் இந்தவழக்கம் நடைமுறையில் இருப்பதை காட்டுகிறது. நம் நாட்டிலுள்ள மற்றைய பெண்களை போலவே பெருந்தோட்ட பெண்களுக்கும் உரிமைகள் உண்டு சர்வதேச ரீதியாக உருவாக்க்பட்டு நமது நாட்டு அரசாங்கத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பெண்களுக்கெதிரான அனைத்து பாரட்சங்களையும் நீங்குவது தொடர்பான அனைத்துலக பொருந்தனையின் பதிநான்காவது சரத்தின் படி பெருந்தோட்ட பெண்கள் சமமாக நடத்தப்படவும்ää சுகாதாரம்ää சுகநல சேவைகளை அனுபவிக்கவும் உரிமை உடையவர்களாவர். கர்ப்பிணிப்பெண் ஒருவரை லொறியில் ஏற்றி சென்று சிசு மரணிக்கவும் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தவும் காரணமாயிருந்திருப்பது பெருந்தோட்ட பெண்களின் உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயலாகும்..
சிறுவர் உரிமை சாசனத்தின் 6வது சரத்து சிறுவர்கள் உயிர் வாழும் உரிமை உடையவர்கள் என்பதையும் சமவாயத்தில் 24ம் சரத்து “பிள்ளைகள் கூடுமானளவு உயரிய சுகாதார வசதிகளைப் பெறும் உரிமையுடையவர்களாவர். சுகாதார மற்றும் வைத்திய சேவைகளைப் பெறும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தல் வேண்டும் விசேடமாக சிசு மரணம்ää நோய்ää போசாக்கின்மை ஆகியவற்றைக் குறைக்கும் வகையிலான ஆரம்ப மற்றும் தடுப்பு ரீதியான சுகாதார பராமரிப்பு; பெறும் உரிமை சிறுவருக்கு உண்டு எனவும் வலியுறுத்துகையில் இந்தவிடயத்தில் பெண்கள் உரிமைகளை போலவே சிறுவர்களின் உரிமைகளும் மீறப்பட்டு;ளளன.
இவ்வாறாக அரசாங்கமே அங்கீகரித்து பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ள சிறுவர் உரிமைகளையும் பெண்கள் உரிமைகளையும் தோட்ட நிர்வகங்களும் கம்பனிகளும் மீறுவதை அனுதிக்க கூடாது. நோயாளிகளின் விசேடமாக கர்ப்பினித் தாய்மார்களின் போக்குவரத்து தேவைக்காக லொறிகளை பயன்படுத்துவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பல தோட்டங்களில் வைத்திய தேவைகளுக்காக அம்புலன்ஸ் பயன்படுத்தபடுகின்றன. இதுவே சரியான நடைமுறை. இதைவிடுத்து சில தோட்ட கம்பனிகளும் நிர்வாகங்களும் செலவை கட்டுப்படுத்துவதற்காக பெருந்தோட்ட மக்களின் சுகாதாரத்திற்காக உரிமைகளை விடேசமாக பெண்கள் சிறுவர்கிளின் உரிமைளை மீறுவதை இனியும் அனுமதிக்க கூடாது. இனி எந்த தோட்டத்திலும் வைத்திய தேவைக்காக லொறிகள் பயன்படுத்தப்பட மாட்டாது என உறுதி மொழியை வழங்குமாறு தோட்டகம்பனிகளுக்கு ஆழுத்தம் கொடுத்த அதை நடைமுறைபடுத்தும் கடமை மலையக அரசியல் தொழிற்சங்க தலைவர்களுக்கு உண்டு.
பெருந்தோட்ட சிவில் அமைப்புக்கள் பெண்கள் அமைப்புக்கள் அவ்வாறே சிறுவர் கழகங்களும் இந்த விடயங்களை சிறுவர் பெண்கள் உரிமை மீறல்களாக கவனததில் கொண்டு குரல் எழுப்பி இவ்வுரிமைகளை பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரிடோ நிர்வனத்தின் கீழுள்ள் பெண்கள் சிறுவர் கழகங்கள் தத்தமது தோட்டங்களில் இந்த விடயங்களை முன்னெடுக்க வேண்டும்.
“வைத்திய தேவைகளுக்காக லொறிகளை பயன்படுத்தும் வழகத்தை முற்றாக நிறுத்துவோம்” என்ற தொனிப்பொருளில் பிரிடோ நிர்வன களப்பணியாளருக்கு போகவந்தலாவையில் நடத்தப்பட்ட செயலமர்வில் கருத்து தெரிவித்து பிரிடோ நிர்வன வெளிக்கள இணைப்பாளர் திரு. சந்திரசேகரன் இவ்வாறு தெரிவித்தார்.


MyFreeCopyright.com Registered & Protected