July 9, 2010

புரட்டொப்ட் சிசு மரண சம்பவம் பெண்கள் உரிமைகளையும் சிறுவர் உரிமைகளை மீறும் செயலாகும்.

புஸ்ஸெல்லாவ பகுதியிலுள்ள புரட்டொப் தோட்டத்தில் கர்பிணித் தாய் ஒருவர் லொறியில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுகையில் லொறியிலேயே குழந்தை பிரசவிக்கப்பட்டு சிசு மரணமான விவகாரம் தொடர்பாக செய்தி பத்திரிக்கைளில் வெளிவந்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் பெண்களை கருத்தடை சிகிட்சை செய்வதற்காக லொறிகளில் ஏற்றி சென்ற விடயத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் வைத்திய தேவைகளுக்காக லொறிகளை பயன்படுத்தும் வழக்கம் கைவிடப்பட்டாக கருதப்பட்டது. ஆனால் புரட்டொப்ட் தோட்ட சம்பவம் இன்னும் தோட்டங்களில் இந்தவழக்கம் நடைமுறையில் இருப்பதை காட்டுகிறது. நம் நாட்டிலுள்ள மற்றைய பெண்களை போலவே பெருந்தோட்ட பெண்களுக்கும் உரிமைகள் உண்டு சர்வதேச ரீதியாக உருவாக்க்பட்டு நமது நாட்டு அரசாங்கத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பெண்களுக்கெதிரான அனைத்து பாரட்சங்களையும் நீங்குவது தொடர்பான அனைத்துலக பொருந்தனையின் பதிநான்காவது சரத்தின் படி பெருந்தோட்ட பெண்கள் சமமாக நடத்தப்படவும்ää சுகாதாரம்ää சுகநல சேவைகளை அனுபவிக்கவும் உரிமை உடையவர்களாவர். கர்ப்பிணிப்பெண் ஒருவரை லொறியில் ஏற்றி சென்று சிசு மரணிக்கவும் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தவும் காரணமாயிருந்திருப்பது பெருந்தோட்ட பெண்களின் உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயலாகும்..
சிறுவர் உரிமை சாசனத்தின் 6வது சரத்து சிறுவர்கள் உயிர் வாழும் உரிமை உடையவர்கள் என்பதையும் சமவாயத்தில் 24ம் சரத்து “பிள்ளைகள் கூடுமானளவு உயரிய சுகாதார வசதிகளைப் பெறும் உரிமையுடையவர்களாவர். சுகாதார மற்றும் வைத்திய சேவைகளைப் பெறும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தல் வேண்டும் விசேடமாக சிசு மரணம்ää நோய்ää போசாக்கின்மை ஆகியவற்றைக் குறைக்கும் வகையிலான ஆரம்ப மற்றும் தடுப்பு ரீதியான சுகாதார பராமரிப்பு; பெறும் உரிமை சிறுவருக்கு உண்டு எனவும் வலியுறுத்துகையில் இந்தவிடயத்தில் பெண்கள் உரிமைகளை போலவே சிறுவர்களின் உரிமைகளும் மீறப்பட்டு;ளளன.
இவ்வாறாக அரசாங்கமே அங்கீகரித்து பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ள சிறுவர் உரிமைகளையும் பெண்கள் உரிமைகளையும் தோட்ட நிர்வகங்களும் கம்பனிகளும் மீறுவதை அனுதிக்க கூடாது. நோயாளிகளின் விசேடமாக கர்ப்பினித் தாய்மார்களின் போக்குவரத்து தேவைக்காக லொறிகளை பயன்படுத்துவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பல தோட்டங்களில் வைத்திய தேவைகளுக்காக அம்புலன்ஸ் பயன்படுத்தபடுகின்றன. இதுவே சரியான நடைமுறை. இதைவிடுத்து சில தோட்ட கம்பனிகளும் நிர்வாகங்களும் செலவை கட்டுப்படுத்துவதற்காக பெருந்தோட்ட மக்களின் சுகாதாரத்திற்காக உரிமைகளை விடேசமாக பெண்கள் சிறுவர்கிளின் உரிமைளை மீறுவதை இனியும் அனுமதிக்க கூடாது. இனி எந்த தோட்டத்திலும் வைத்திய தேவைக்காக லொறிகள் பயன்படுத்தப்பட மாட்டாது என உறுதி மொழியை வழங்குமாறு தோட்டகம்பனிகளுக்கு ஆழுத்தம் கொடுத்த அதை நடைமுறைபடுத்தும் கடமை மலையக அரசியல் தொழிற்சங்க தலைவர்களுக்கு உண்டு.
பெருந்தோட்ட சிவில் அமைப்புக்கள் பெண்கள் அமைப்புக்கள் அவ்வாறே சிறுவர் கழகங்களும் இந்த விடயங்களை சிறுவர் பெண்கள் உரிமை மீறல்களாக கவனததில் கொண்டு குரல் எழுப்பி இவ்வுரிமைகளை பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரிடோ நிர்வனத்தின் கீழுள்ள் பெண்கள் சிறுவர் கழகங்கள் தத்தமது தோட்டங்களில் இந்த விடயங்களை முன்னெடுக்க வேண்டும்.
“வைத்திய தேவைகளுக்காக லொறிகளை பயன்படுத்தும் வழகத்தை முற்றாக நிறுத்துவோம்” என்ற தொனிப்பொருளில் பிரிடோ நிர்வன களப்பணியாளருக்கு போகவந்தலாவையில் நடத்தப்பட்ட செயலமர்வில் கருத்து தெரிவித்து பிரிடோ நிர்வன வெளிக்கள இணைப்பாளர் திரு. சந்திரசேகரன் இவ்வாறு தெரிவித்தார்.


MyFreeCopyright.com Registered & Protected

No comments:

Post a Comment